நெஞ்சை தொடும் ஈர வரிகள்.

Sunday, March 19, 2006

வேண்டாம்.

வேண்டாம்.


கொண்று விடும்.
மானிடம் வேண்டாம்.

பொசுக்கும் வார்த்தை
வேண்டாம்.

கல்லான மனசும்
வேண்டாம்.

பொல்லாத பெயரும்
வேண்டாம்.

பொய்யான காதலும்.
வேண்டாம்.

பலருக்கு மதிப்பளித்து
பதவியும் தேட
வேண்டாம்.

பணமே..வாழ்வாகி
விட்டபோது
அன்பைதேடி செல்லவும்
வேண்டாம்.
மனதை கொடுத்து துண்புறவும்
வேண்டாம்.

காற்றடைத்தபைக்குள்
இத்தனையும்.
வேண்டாம்.

rahini
germany.

Sunday, March 12, 2006

சுமை

சுமை
----
எரித்திடும் வார்த்தைகளை
சுமப்பதை விட..
என் உடலை
எரித்துவிட்டால்..
இந்தப்பூமிக்கும்..
சுமையில்லாத
சுகமாகிவிடும்.
-----
rahini

தேடுவது...

தேடுவது...

-------------
நெஞ்சம் எதைத்...
தேடுகின்றது
யதார்த்தமான
வார்த்தைகளை.
பொய்மையும்... தீ..மையும்
இல்லா.....நேசங்களை.
வங்சனை செய்யா..
மனிதர்களை.
----
rahini

Saturday, March 11, 2006

பணம்.


பணம்.

பணமே....நீ...ஒழிந்துவிடு
குணத்தை ஒரு கணம்
வாழவிடு.

மனிதனை அழிக்கும்
விஷமாக நீ...வந்தாய்
சொந்தங்களுக்கு விரிஷலும்
நீ....தந்தாய்
நட்புக்கு சலனமும்
நீ..கொடுத்தாய்
காதலுக்கு வலியும்
நீ...வாங்கித்தந்தாய்

இருந்தும்...

நீ..இருந்தாலும்
தொல்லை.
இல்லை என்றாலும்
தொல்லை.

rhini

தாய்

தாய்


தனை மறந்து உனை சுமந்தாள்
மறு பிறவிதான் கண்டு
உனை பெற்றெடுத்தாள்

மழலையால் நீ.... தவழதன்
ரத்தத்தை பாலாக்கினாள்
இரவைப்பகலாக்கி முத்துப்..போல்
வளர்த்தெடுத்தாள்.
தாய் வேறு சேய் வேறு ஆனாலும்
தன் உயிர் நாள் எல்லாம் சுமந்திருப்பாள்.

உன் மனம் மாறினாலும்என்றும்
தாய்மனம் மாறாது.
நீ…..யும் தாயானாள்........
அப்போ…… புரியும்
தாய்ப்பாசம்.

நினைவஞ்சலி


நினைவஞ்சலி.


பெற்றவள் துடிதுடித்து..
மகனிடம் கண்ணீர் சிந்தி
கஞ்சிக்கு கையேந்த...
மகனோ..மாற்றாம்
தாய் இறந்த செய்திகேட்டு
தாய்மையைப் போற்றி
அனுதாபக் கவி அச்சிட்டு
மக்கள் மத்தியில் புகழ்..
தேடுகின்றான்.

rahini