நெஞ்சை தொடும் ஈர வரிகள்.

Saturday, December 27, 2008

Thursday, December 11, 2008

வெற்றி தோல்வி

நிம்மதி என்பது இல்லை

---------

தேடி தேடி அலைந்து கொண்டே போனால்
நிம்மதி என்பது இல்லை

பெட்டி நிறைய பணம் இருக்கும்
அவன் மனதில் நிம்மதி இல்லை
சட்டி நிறைய சாதம் இருக்கும்
அவன் வயிற்றில் பசி இல்லை
பார்க்கும் இடங்கள் எல்லாம்
மனை இருக்கும்
அங்கே இருப்பதற்கு மனிதர் இல்லை
இத்தனையும் இருக்கும் அவனிடம்
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
அன்பு இல்லை ஆதரிக்க ஆளும் இல்லை


சொல்லிவிடு
----
உன்னை நீ..மதிக்கத்தொடங்கு
அப்போதுதான் நீ..உயர்வாய்.
மனதில் பட்டதை சொல்லிவிடு
இல்லாவிடில் நீ.சொல்ல வந்ததை மற்றவர் சொல்லும் போது
கை கட்டி நின்று கேட்கநேரிடும்


வெற்றி தோல்வி
-------

வெற்றி பெற்றவன் நிமிர்ந்து விட
தோல்வியுற்றவன் பொறாமை கொள்கின்றான்
தோல்வியுற்றவன் நிமிர்ந்துவிட
வெற்றிபெற்றவன் தட்டிக்கொடுக்கின்றான் .

கொடுத்ததை நினைப்பதை விட
பெற்றதை நினைப்பது சிறந்தது

இறைவன் இருக்கும் இடமே
துன்பங்களையும் துயரங்களையும்
மறக்கச்செய்யும் இடம்

என்னை சுமக்கும் என்தாயே

என்னை சுமக்கும் என்தாயே
------------------
என் இதயத்தில் நிறைந்த
ஊற்றே
பாசத்தின் தாயே.
என்னை பெற்றெடுக்காமலே..
என்னை அன்பாக
அரவணைத்து
இனித்திடும் அன்பு
மொழி பேசி
என் குரல் தனை உங்கள்
செவிதனில் அருந்தி
என்னை பாடச்...சொல்லி
இன்பமாய் தூங்கும்
உங்களை எனக்கு
அம்மாவக தந்த
இறைவனுக்கு நன்றி
சொல்லித்தான் தீர்க்க
முடியுமா..?
இந்த உறவின் கடனை
நான் இப்பிறப்பில்
உதயத்தை காண்பேணா
என்று ஏங்கி உறங்கும்
நேரம் எல்லாம்
என் முன் உங்கள் முகம்
உதயமாய் தோண்றும்
போதெல்லாம்
இன்பமாய் எழுந்திடும்
நாட்களை தந்தன
உங்கள் அன்பு.
இதயத்துள் நிறைந்திட்ட
என் தாயே
இன்று என்ன
மாற்றம தந்தான்
இறைவன்
வாழ்க என் தாயே
நலமுடன்.

மலரும் ஆண்டே

மலரும் ஆண்டே
.............
எத்தணை ஆண்டுகள்
வந்த போதும்
நம்மவர் மட்டும்
விடியலைத் தேடியே
செல்கின்றோம்
அதிகாலை எழுந்து
புத்தாடை அணிந்து
கோவில் சென்று
புத்துணர்வு பெற்று
புதுப்பொழிவுடன்.
சுற்றத்தாருடன்
தன் இல்லம் வாழ்திட
விடிவுதான் மலருமோ..?

மலரும் புதிய ஆண்டே பதில்
சொல் நீயாவது.

வானத்தை தொட்டு மகிழ
வாணங்கள் சீறி எழ
வண்ணமாய் ஒளி கொடுக்க
எனி வரும் புதிய ஆண்டே
நீ..யாவது விடை கொடு
இறப்புக்கு விட கொடுத்து
பிஞ்சுகளை வாழ விட்டு
செல்லத்தமிழ் பேசி
கொஞ்சி விளையாட
மலரும் புதிய ஆண்டே
வழி கொடு