நெஞ்சை தொடும் ஈர வரிகள்.

Friday, January 16, 2009

சிந்தி நன்றாக சிந்தி நல்லதை சிந்தி நலமோடு சிந்தி.

சிந்தி நன்றாக சிந்தி நல்லதை சிந்தி நலமோடு சிந்தி.
----------------


மறப்பதை மறக்க வேண்டும் நினைப்பதை நினைக்க வேண்டும்
நினைவில் நின்று விட்டால் மரணம் வரை மறக்ககூடாது
மறந்தால் நினைக்க கூடாது நினைப்பதற்கு முன்சிந்திக்க வேண்டும்
சிந்திக்க முன் முடிவெடுக்க கூடாது முடிவெடுத்து விட்டால் சிந்திக்க கூடாது.


அழிப்பதை விட உருவாக்குவது சிறந்தது உருவாக்கிய பின் அழிக்க கூடாது
அழித்து விட்டால் அதை நினைக்கக். கூடாது. நினைத்துவிட்டால் அழிக்க கூடாது.
தெரிந்து கொள் தேவையானதை தெரியாவிட்டால் கற்றுக்கொள்
கற்றுக்கொள்ள முதல் எது என்பதை அறிந்து விடு அறிய முதல் சிந்திக்க தெரிந்துகொள்.

கற்றதை புதைத்துவிடாதே புதைப்பது என்றால் கற்று விடாதே
நல்லதை கற்றக்கொள் எது நல்லது என்பதை அறிந்துகொள்.
நல்லது என்றால் எது என்று கற்றுக்கொள்.
கற்றுக்கொள்ளும் போது கெட்டதை சிந்திக்காதே விடயத்தில் கவனம் எடு


கவனத்தில் திசை திரும்பாதே. திசை திரும்பினால் கவனத்தை சிதறவிடாதே
சிதறவிடுமுன் சிந்தி ஒருமுறை சிந்திக்காவிட்டால் கவனமாய் இருந்துவிடு
கவனத்தில் குழம்பாதே குழம்பினால் குழப்பத்தில் மாட்டிவிடுவாய்.
மாட்டிவிட்டால் மீளமாட்டாய் மீள்ந்த விட்டால் நிமிர்ந்துவிடுவாய்.

நிமிர்ந்தவிட்டால் வெற்றிதான் வெற்றியின் பின் வாழ்வுதான்
வாழ்வதான் என்று துள்ளி விடாதே துள்ளி விட்டால் அள்ளிக்கொண்டு போய்விடும்.
அள்ளிக்கொண்டு போனால் பாதளத்தில் போய் விடுவாய்
பாதாளத்தில் போனால் உன்னை தூக்கிவிட மறுத்துவிடுவார்கள்

பாதளத்தில் போக வேண்டுமா என்று துள்ளமுதல்.சிந்தி
துள்ளி விட்டு சிந்திகாதே சிந்தித்துவிட்டால் பூரிப்படைவாய்
பூரிப்பில் முகம் மலர்வாய் முகம்மலர்நதல் அகம் மலரும்
அகம்மலருதே என்று மதிக்காமல் நடக்காதே


மதிக்காமல் நடந்தால் உன்னை சிந்திக்கமாட்டார்கள்.
சிந்திக்காவிட்டால்உனக்கு மதிப்பிருக்காது
மதிப்பு என்றால் என்ன என்று புரிந்தகொள்.
புரிந்து கொண்ட பின் அதன் படி நடக்ககற்றுக்கொள்.

அதன் படி நடந்துவிட்டால் நடந்த பாதையை மறந்துவிடாதே
மறந்துவிட்டால்தூற்றப்படுவாய் தூற்றியபின்
நல்வன் என்று பெயர் எடுக்கமாட்டாய்
அதனால்...
சிந்தி நன்றாக சிந்தி நல்லதை சிந்தி நலமோடு சிந்தி.



rahini





Saturday, December 27, 2008

Thursday, December 11, 2008

வெற்றி தோல்வி

நிம்மதி என்பது இல்லை

---------

தேடி தேடி அலைந்து கொண்டே போனால்
நிம்மதி என்பது இல்லை

பெட்டி நிறைய பணம் இருக்கும்
அவன் மனதில் நிம்மதி இல்லை
சட்டி நிறைய சாதம் இருக்கும்
அவன் வயிற்றில் பசி இல்லை
பார்க்கும் இடங்கள் எல்லாம்
மனை இருக்கும்
அங்கே இருப்பதற்கு மனிதர் இல்லை
இத்தனையும் இருக்கும் அவனிடம்
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
அன்பு இல்லை ஆதரிக்க ஆளும் இல்லை


சொல்லிவிடு
----
உன்னை நீ..மதிக்கத்தொடங்கு
அப்போதுதான் நீ..உயர்வாய்.
மனதில் பட்டதை சொல்லிவிடு
இல்லாவிடில் நீ.சொல்ல வந்ததை மற்றவர் சொல்லும் போது
கை கட்டி நின்று கேட்கநேரிடும்


வெற்றி தோல்வி
-------

வெற்றி பெற்றவன் நிமிர்ந்து விட
தோல்வியுற்றவன் பொறாமை கொள்கின்றான்
தோல்வியுற்றவன் நிமிர்ந்துவிட
வெற்றிபெற்றவன் தட்டிக்கொடுக்கின்றான் .

கொடுத்ததை நினைப்பதை விட
பெற்றதை நினைப்பது சிறந்தது

இறைவன் இருக்கும் இடமே
துன்பங்களையும் துயரங்களையும்
மறக்கச்செய்யும் இடம்

என்னை சுமக்கும் என்தாயே

என்னை சுமக்கும் என்தாயே
------------------
என் இதயத்தில் நிறைந்த
ஊற்றே
பாசத்தின் தாயே.
என்னை பெற்றெடுக்காமலே..
என்னை அன்பாக
அரவணைத்து
இனித்திடும் அன்பு
மொழி பேசி
என் குரல் தனை உங்கள்
செவிதனில் அருந்தி
என்னை பாடச்...சொல்லி
இன்பமாய் தூங்கும்
உங்களை எனக்கு
அம்மாவக தந்த
இறைவனுக்கு நன்றி
சொல்லித்தான் தீர்க்க
முடியுமா..?
இந்த உறவின் கடனை
நான் இப்பிறப்பில்
உதயத்தை காண்பேணா
என்று ஏங்கி உறங்கும்
நேரம் எல்லாம்
என் முன் உங்கள் முகம்
உதயமாய் தோண்றும்
போதெல்லாம்
இன்பமாய் எழுந்திடும்
நாட்களை தந்தன
உங்கள் அன்பு.
இதயத்துள் நிறைந்திட்ட
என் தாயே
இன்று என்ன
மாற்றம தந்தான்
இறைவன்
வாழ்க என் தாயே
நலமுடன்.

மலரும் ஆண்டே

மலரும் ஆண்டே
.............
எத்தணை ஆண்டுகள்
வந்த போதும்
நம்மவர் மட்டும்
விடியலைத் தேடியே
செல்கின்றோம்
அதிகாலை எழுந்து
புத்தாடை அணிந்து
கோவில் சென்று
புத்துணர்வு பெற்று
புதுப்பொழிவுடன்.
சுற்றத்தாருடன்
தன் இல்லம் வாழ்திட
விடிவுதான் மலருமோ..?

மலரும் புதிய ஆண்டே பதில்
சொல் நீயாவது.

வானத்தை தொட்டு மகிழ
வாணங்கள் சீறி எழ
வண்ணமாய் ஒளி கொடுக்க
எனி வரும் புதிய ஆண்டே
நீ..யாவது விடை கொடு
இறப்புக்கு விட கொடுத்து
பிஞ்சுகளை வாழ விட்டு
செல்லத்தமிழ் பேசி
கொஞ்சி விளையாட
மலரும் புதிய ஆண்டே
வழி கொடு

Monday, October 27, 2008

அறிவுத்தீயா..?அறியாமைத்தீயா..? அகிலத்தை ஆழுகின்றது.

அறிவுத்தீயா..?அறியாமைத்தீயா..? அகிலத்தை ஆழுகின்றது.

-----------
அறிவுத்தீயாக பிறந்து
உல்லாச வாழ்கை வாழ்ந்து
முற்கள் இல்லா பாதைகளில்
இதமாக கால் தடம் பதித்து
உலகை ஆழ்ந்து கொண்டிருந்த
நம் இனமக்களை
அறியாமைத்தீ ஒன்று நம் இனத்தை
அழித்துகொண்டடதால் ஆங்காங்கே சிதறி
கொண்டன நம் தழிழ் இனம்.
எங்கே அகிலத்தை ஆழ்வது
புலம் பெயர் வாழ்வில் ஏது அகிலமான வாழ்கை.
அடிமையான வாழ்கை பாதை தானே!!

அறியாமைத் தீயால்
தீபாவளியை கொண்டாடடி மகிழ்வதை வதை விட
அறிமைத்தீ.. கொண்டு
இருக்க இடம் உண்ண உணவும் உறங்க இடம் இன்றி
தவிக்கும் நம் இனத்தை ஆதரித்துவாழ்வதே நாம்
அகிலத்தை ஆழுகின்ற இன்பம் கிடைக்கும்.

கவிதைக்குயில்
பா. ராகினி

ஜெர்மன்

Sunday, July 29, 2007

கொடுமை


இந்த பிஞ்சு மனதை பரிதவிக்க விட்டது

தாயின் மரணம்.

Sunday, October 08, 2006

உனக்கு பெருமை.

எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]

என்றும் இனியவை-1

என்றும் இனியவை-2

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்

http://clearblogs.com/piriyaa/


தன்னம்பிக்கை கொள்வதே..
உனக்கு பெருமை.
கர்வம் கொள்வது
உனது இயலாமை.

நீ..மற்றவர்களுடன்
பழகும்போது
இனிமையுடன்
பழகிக்கொள்
அப்போது..உன்னோடு
பழகுபவர்கள்.இனிமையாக
பழகுவார்கள்.

அன்பையும் மரியாதையும்
நாம்கேட்டு வாங்கினால்
அது என்றும் நிலையானதல்ல.

எதுவும் நாம் தேடிப்
போகாமல்
நமக்கு கிடைத்தால்
அதுவே... நிரந்தரம்.

திறமை இருக்கு
என்னிடம் என்று..
தூங்கிக்கொண்டிருந்தால்
உன் திறமை உன்னக்கு
மட்டுமே.. தெரிந்து
கொள்ளும்.

ஒரு கனம் சிந்தித்தால்
உன் திறமை உனக்கே..
வெற்றி தரும்.

அநீதியும் அலர்ச்சியமும்
ஒருபோதும்
வெற்றியைத்தராது.

வாழ்வை ரசிக்கத்தொடங்கு.
வாழ்வே... உனக்கு
வெற்றிதான்.

Sunday, March 19, 2006

வேண்டாம்.

வேண்டாம்.


கொண்று விடும்.
மானிடம் வேண்டாம்.

பொசுக்கும் வார்த்தை
வேண்டாம்.

கல்லான மனசும்
வேண்டாம்.

பொல்லாத பெயரும்
வேண்டாம்.

பொய்யான காதலும்.
வேண்டாம்.

பலருக்கு மதிப்பளித்து
பதவியும் தேட
வேண்டாம்.

பணமே..வாழ்வாகி
விட்டபோது
அன்பைதேடி செல்லவும்
வேண்டாம்.
மனதை கொடுத்து துண்புறவும்
வேண்டாம்.

காற்றடைத்தபைக்குள்
இத்தனையும்.
வேண்டாம்.

rahini
germany.